உள்ளூர் செய்திகள்

அண்ணா நினைவு தினத்தையொட்டி நெல்லையில் நாளை தி.மு.க. சார்பில் அமைதி பேரணி

Published On 2023-02-02 09:18 GMT   |   Update On 2023-02-02 09:18 GMT
  • முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா நினைவு தினத்தையொட்டி நெல்லை தி.மு.க சார்பில் அமைதிப்பேரணி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
  • நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது.

நெல்லை:

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா நினைவு தினத்தையொட்டி நெல்லை தி.மு.க சார்பில் அமைதிப்பேரணி நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மத்திய மாவட்டம்

இது தொடர்பாக தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா நினைவு நாளையொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது. நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையை பேரணி அடைந்ததும் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது. கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். எனவே பேரணியில் தி.மு.க. தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்டம்

இதேபோல நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், அண்ணா நினைவு நாளையொட்டி அமைதி பேரணி நாளை காலை 9 மணிக்கு களக்காடு காமராஜர் சிலை முன்பிருந்து தொடங்குகிறது. அண்ணா சிலை அருகே பேரணி நிறைவடைந்ததும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில், கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News