பட்டு வளர்ப்பு குறித்து செயல்விளக்கம்
- அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஜான்சிலட்சுமி தலைமை தாங்கினார்.
- உயிர் உரங்கள் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மணவாரனப்பள்ளியில் விவசாயிகள் திறமை மேம்பாட்டுத் திட்டத்தில் பட்டுவளர்ப்பு குறித்த செயல்விளக்க பயிற்சி நடந்தது. இதில், மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டுப்புழுவியல் பயின்று வரும் மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சிக்கு அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஜான்சிலட்சுமி தலைமை தாங்கினார்.
இந்த பயிற்சியின் போது, பட்டுப்புழு வளர்ப்பு, கொட்டகை பராமரிப்பு, கிருமிநாசினி தெளித்தல், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சீராக்குதல் உள்ளிட்டவை குறித்தும், மல்பரி சாகுபடி, பசுந்தாள் உரத்தின் பயன்கள், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள், வேப்பெண்ணெய் கலந்த ரசாயன உரம் பயன்படுத்துதல், உயிர் உரங்கள் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
வெண்பட்டின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில், பலகலப்பின பட்டு விவசாயிகளை வெண்பட்டு விவசாயிகளாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கான களபயிற்சியை வனக்கல்லூரி மாணவிகள் வனிதா, ஸ்ரீவாணி, சுகன்யா, சுபாஷினி, ஷேபனா ஆகியோர் அளித்தனர். இதில் மணவாரனப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.