உள்ளூர் செய்திகள்

பேட்டை பகவதி அம்மன் கோவிலில் கொலு வைக்கப்பட்டுள்ள காட்சி. சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

நவராத்திரியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் கொலு வைத்து வழிபாடு

Published On 2022-09-28 07:57 GMT   |   Update On 2022-09-28 07:57 GMT
  • நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு கொலு அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது.
  • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் ப‌ரமத்திவேலூர் சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு கொலு அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

அதேபோல் நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்த அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பரமத்தி அங்காளம்மன் பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Tags:    

Similar News