அமாவாசையை முன்னிட்டு வாழைத்தார் விலை கிடுகிடு உயர்வு
- வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை தொப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர்.
- நாளை அமாவாசை என்பதால் வாலைத்தார்களின் வரத்து குறைந்தால், விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம் வெங்கரை, கள்ளிப்பாளையம், பொத்தனூர் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் வாழைத்தார் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்கள் கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் கரூர், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை தொப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர்.
மேலும் இங்கு உற்பத்தி செய்யும் வாழைத்தார்களின் ஒரு பகுதியை விவசாயிகள் பரமத்திவேலூரில் நடைபெற்று வரும் தினசரி வாழைத்தார் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை அமாவாசை என்பதால் வாலைத்தார்களின் வரத்து குறைந்தால், விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது வழைத்தார்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து குறைந்துள்ளதால் தார்களின் விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பரமத்திவேலூர் வாழைத்தார் மார்கெட்டில், பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.700 முதல் 1100 ரூபாய் வரையிலும், ரஸ்தாலி ரூ.600 முதல் 900 வரையிலும், கற்பூரவள்ளி ரூ. 550 முதல் 700 வரையிலும், ஏலரிசி வாழை ரு.250 முதல் 300 வரையிலும், பச்சை நாடன் ரு.400 முதல் 600 வரையிலும் மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ 10 வரையிலும் செவ்வாழைப்பழம் ஒன்று ரூ.12-க்கு விற்பனையானது. அமாவாசையை முன்னிட்டு கடந்த வாரத்தை விட தார் ஒன்றுக்கு ரூ.300 முதல் 500 வரை விலை ஏற்றத்தால் வாழை பயிரிட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.