கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பன்னிமடை கிருஷ்ணசாமி கோவிலில் உறியடி திருவிழா
- கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
- சிறுவர்கள் அதில் இருந்த வெண்ணையை போட்டி போட்டு எடுத்து ரசித்து ருசித்தனர்.
கவுண்டம்பாளையம்
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதிகாலை கணபதி ஹோமத்து டன் விழா தொட ங்கியது. அபிஷேக பூஜை, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை நடைபெற்ற உரியடி நிகழ்ச்சியில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் பங்கேற்றனர். உரியடிப்பவர்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி உரியை அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர்.
வெண்ணை நிரப்பட்ட உரி பானையை அடித்து உடைத்த சிறுவர்கள் அதில் இருந்த வெண்ணையை போட்டி போட்டு எடுத்து ரசித்து ருசித்தனர். மேலும் உரிய அடித்த சிறுவர் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் விழா குழுவினர் சார்பாக வழங்கினர்.
தொடர்ந்து 40 அடி உயரம் கொண்ட வழுக்கு மரம் தயார் செய்யப்பட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடைபெற்றது. எண்ணை, கடுகு, அரப்பு, கற்றாளை உள்ளிட்டவைகளைக் கொண்டு வழுக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மரத்தில் சிறுவர்கள், இளை ஞர்கள் போட்டி போட்டு ஏறினர். இறுதியில் ஒரு இளைஞர் 40 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறி உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை எடுத்தார். இதை சுற்று வட்டாரங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்தனர்.தொடர்ந்து அலங்கரிக்க ப்பட்ட வாகனத்தில் கிருஷ்ணர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணர் கோவில் இறைவழிபாடு விழாகுழுவினர் செய்திருந்தனர்.