உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நாமக்கல் மாவட்ட ஊராட்சிகளில் 1-ந்தேதி கிராமசபை கூட்டம்
- நாமக்கல் மாவட்டத்தி லுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தி லுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல்.
கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு,
ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி/சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக்குழு உருவாக்குதல்,
2021 -22 மற்றும் 2022 - 23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களின் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.