உள்ளூர் செய்திகள்

 மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடியவர்களை படத்தில் காணலாம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

Published On 2023-06-04 09:21 GMT   |   Update On 2023-06-04 09:26 GMT
  • உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மராத்தான் போட்டி அண்ணா ஸ்டேடியத்தில் தொடங்கி ஆயுதப்படை மைதானம், பாளை பஸ் நிலையம் வழியாக மீண்டும் அண்ணா ஸ்டேடியத்தை வந்தடைந்தது.

நெல்லை:

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியை பாதுகாக்கவும், மாவட்டத்தின் மக்கள் அனைவரும் நம் மண்ணை பாதுகாக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மராத்தான் போட்டி பாளை அண்ணா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் நடந்த இந்த மராத்தான் அண்ணா ஸ்டேடியத்தில் தொடங்கி ஆயுதப்படை மைதானம், பாளை பஸ் நிலையம் வழியாக மீண்டும் அண்ணா ஸ்டேடியத்தை வந்தடைந்தது.

சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த போட்டியானது ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் என தனித்தனியாக பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது. சிறியவர்கள் முதல் இளம் வயதினர், முதியவர்கள் வரையிலும் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர். இதில் முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 5 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 4 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 3 ஆயிரமும் என ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் 4 முதல் 50 இடங்கள் வரை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ. 200 ஊக்க பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மராத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News