உள்ளூர் செய்திகள்

வால்பாறை சாலைகளில் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் சிங்கவால் குரங்குகள்

Published On 2023-02-07 09:20 GMT   |   Update On 2023-02-07 09:20 GMT
  • என்.சி.எப். அமைப்பினர் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
  • பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் மற்றும் வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன.

இவை புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி சாலைகளில் அதிகளவில் காணப்படுகின்றன. சிங்கவால் குரங்குகள் வாகனங்களில் அடிபடக் கூடாது என்பதற்காக அப்பகுதியில் என்.சி.எப். அமைப்பினர் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் பகல் நேரங்களில் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர். இருப்பினும் அதிகளவில் வாகனங்கள் வரும்போது சாலையை கடக்கும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்து வருகின்றன.

வறட்டுப்பாறை எஸ்டேட் சாலையில் வாக னத்தில் அடிபட்டு சிங்கவால் குரங்கு நேற்று உயிரிழந்தது. அழிந்து வரும் இந்த அரியவகை சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News