உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய உடையில் வந்து ஓணம் பண்டிகையை சிறப்பித்த காட்சி.

நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Published On 2023-08-31 10:00 GMT   |   Update On 2023-08-31 10:00 GMT
  • பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று இவ்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
  • கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஓணம் கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி,

கேரளாவின் அறுவடை திருநாளான ஓணம் பண்டி கை நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி யின் நிறுவனர் கொங்க ரசன், பள்ளியின் தாளா ளர் சாமுண்டீஸ்வரி, நிர்வாக இயக்குனர்கள் கவுதமன், புவியரசன், பள்ளியின் முதல்வர் பார்வதி ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

மேலும், பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று இவ்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஓணம் கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மாணவ, மாணவிகள் பல்வேறு வண்ண மலர் களின் இதழ்களை பயன்படுத்தி வண்ணமயமான ரங்கோலி கோலம் வரைந்து பள்ளியை அலங்கரித்தனர்.

Tags:    

Similar News