உள்ளூர் செய்திகள்

விழாவில் கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்த பள்ளி குழந்தைகள்.

சிவசக்தி வித்யாலயா பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Published On 2022-09-09 07:50 GMT   |   Update On 2022-09-09 07:50 GMT
  • மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த பூக்களால் அத்தப்பூ கோலம் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
  • ஆதிலா, ஜெப்ரின் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

தென்காசி:

பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூர் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.

மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த பூக்களால் அத்தப்பூ கோலம் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓணம் வரலாறு குறித்து மாணவி வர்ஷா பேசினார். பேபிஜெனிகா ஓணம் குறித்த வினாடி-வினா நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நடத்தினார். மாணவிகள் ஆதிலா, ஜெப்ரின் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து முதல்வர் நித்யா தினகரன் செய்திருந்தார்.

Tags:    

Similar News