தூத்துக்குடி லாரி டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
- ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருநாழியை சேர்ந்தவர் மணிகண்டன் லாரி டிரைவர்.
- ஆத்திரம் அடைந்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மணிகண்டனை பிடித்து கீழே தள்ளி உள்ளனர்.
தூத்துக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருநாழியை சேர்ந்தவர் மணிகண்டன்
(வயது 35). லாரி டிரைவர்.
டிரைவர்
இவர் கடந்த 10-ந் தேதி தூத்துக்குடிக்கு லாரி ஓட்டிவந்தார். பின்னர் மணிகண்டன், அவரது நண்பர் பேரூரணி சமத்துவபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (31) மற்றும் 2 பேர் மது குடித்தனர். தொடர்ந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மணிகண்டனை பிடித்து கீழே தள்ளி உள்ளனர்.
இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் இறந்தார்.
இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதில், பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மணிகண்டனை தாக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சண்முகம் கொலை வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை நேற்று கைது செய்தார்.
மேலும் ஒருவர் கைது
இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டையை சேர்ந்த வேல்முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.