உள்ளூர் செய்திகள்
ஊட்டி கலெக்டர் அலுவலக பெயர் பலகையில் குளறுபடி
- பணிகளில் குளறுபடி காரணமாக தரக்குறைவு இருப்பதாக புகாா்கள் எழுந்து உள்ளன.
- புனரமைப்பு பணிகளின் தரமும் கேள்விக்குறியாக உள்ளன என தன்னாா்வலா்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆங்கிலேயா் காலத்தில் கட்டபட்டது. இன்றளவும் பழமை மாறாமல் வலிமையாகவும், கம்பீரமாகவும் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலும் காட்சி தருகிறது.
நூற்றாண்டுகளை கடந்தும் கட்டிடங்கள் உறுதியாக உள்ளன. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. அந்த பணிகளில் குளறுபடி காரணமாக தரக்குறைவு இருப்பதாக புகாா்கள் எழுந்து உள்ளன.
ஊட்டி கலெக்டர் அலுவலக முகப்பில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பெயா்ப் பலகை சிதலமடைந்த நிலையில் உள்ளது. அதில் 'ஆா்' எழுத்து பதித்த சில நாட்களிலேயே கீழே விழுந்து விட்டது. எனவே ஒட்டுமொத்த புனரமைப்பு பணிகளின் தரமும் கேள்விக்குறியாக உள்ளன என தன்னாா்வலா்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.