உள்ளூர் செய்திகள்

புதிய கிராம செயலக கட்டிடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

எருக்கூர் ஊராட்சியில் 3 புதிய கட்டிடங்கள் திறப்பு

Published On 2023-10-27 09:21 GMT   |   Update On 2023-10-27 09:21 GMT
  • புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
  • மாதானம் ஊராட்சியில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

சீர்காழி:

சீர்காழி அருகே எருக்கூர் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி கிராம செயலக கட்டிடம், புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்ட ப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடம், மாதானம் ஊராட்சி யில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகிய 3 புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

விழாவிற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ராமலிங்கம் எம்.பி., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஊராட்சி தலைவர்கள், காந்திமதி சிவராமன், முத்தமிழ் செல்வி சுப்பையன், வசந்தி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News