நமக்கு நாமே திட்டத்தில் புறையூர் ஊராட்சியில் புதிய நூலக கட்டிட திறப்பு
- ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்வார்திருநகரி யூனியனுக்கு உட்பட்ட புறையூர் ஊராட்சி மன்றத்தில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
- நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் கலந்து கொண்டு புதிய நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நாசரேத்:
நமக்கு நாமே திட்டத்தில் ரூ.11 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஆழ்வார்திரு நகரி யூனியனுக்கு உட்பட்ட புறையூர் ஊராட்சி மன்றத்தில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
கட்டிடம் திறப்பு விழா
நமக்கு நாமே திட்டத்தில் நாலுமாவடி புது வாழ்வு சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நிதி பங்கீடாக ரூ. 3,67,000 வழங்கப்பட்டு புதிய கட்டிடமும் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் செல்வக்குமார், துணைத் தலைவர் மாட சாமி ஆகியோர் முன்னி லை வகித்தனர். இதில் நாலுமாவடி இயேசு விடுவி க்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் கலந்து கொண்டு புதிய நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தம்பிரான், இக்பால், ஹனிபா, ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கடம்பாகுளம் பாசன மடை எண் 5, 6 வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவ னர் மோகன் சி. லாசரஸ் கலந்து கொண்டு கொடி அசைத்து பணிகளை தொடங்கி வைத்தார். ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மேலக்கடம்பா ஊர்த்தலை வர் பலவேசம், விவசா யிகள் சரவணன், முத்து, சுதா, தூர்க்கையாண்டி, ஆபிரகாம், குருகாட்டூர் ஜேம்ஸ், சித்தர், ஜோஷ்வா, கல்லை ஆறுமுகம், நாலு மாவடி இயேசு விடுகிறார் ஊழியர் சமூக பொறுப்பாளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமை யில் ஊழியர்கள் செய்தி ருந்தனர்.