உள்ளூர் செய்திகள்

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2022-09-24 09:46 GMT   |   Update On 2022-09-24 09:46 GMT
  • ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு சேலம் மண்டலம், தர்மபுரி மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • சிறப்பு பஸ் அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை இயக்கப்படும்.

சேலம்:

தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழகம் சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முக்கிய விசேஷ நாட்களில் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு சேலம் மண்டலம், தர்மபுரி மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. சேலத்தில் இருந்து சென்னை,கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, புதுச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிகளவில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ் அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரைஇயக்கப்படும். அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News