கும்பகோணம் கோட்டம் மூலம் 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
- கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 7-ந் தேதி திறக்கப்படவுள்ளது.
- தஞ்சை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய ஊா்களுக்கு 250 பஸ்கள் இயக்கப்பட்டன.
தஞ்சாவூர்:
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படவுள்ளதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் இன்று மற்றும் நாளை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்துக் கழகத்தின் (கும்பகோணம்) மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 7-ந் தேதி திறக்கப்படவுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
வெளியூா் சென்ற பொதுமக்கள் அவரவா் இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கும் 250 பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல, திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 150 பஸ்கள் இயக்கப்பட்டன.
மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பஸ்கள் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.