உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர்.சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து காட்சி.

ஓ.பி.எஸ். மனு தள்ளுபடி: நெல்லையில், எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

Published On 2023-03-28 09:06 GMT   |   Update On 2023-03-28 09:06 GMT
  • தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை:

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராய ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், பகுதி செயலாளர்கள் திருத்து சின்னத்துரை, சிந்துமுருகன், ஜெனி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல் ஜெயபாலன், தச்சை மாதவன் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News