தஞ்சையில் ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
தஞ்சாவூர்:
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் பூத்கமிட்டி அமைப்பது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட அமைப்பாளர்கள் ராஜரத்தினம், பூண்டி கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, சண்முகபிரபு, சுவாமிநாதன், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி, தஞ்சை சட்டமன்ற தொகுதி செயலாளர் சத்தியராஜ், திருவையாறு சட்டமன்ற தொகுதி செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் மணிகண்டன், கவன்சிலர் சரவணன், கரந்தை பகுதி துணை செயலாளர் தாஸ், மாவட்ட தொழில்சங்க இணை செயலாளர் வீரராஜ், குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், நிர்வாகி ராஜேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.