உள்ளூர் செய்திகள் (District)

கலெக்டர் உத்தரவுபடி சத்ய பாமா வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் பட்டா வழங்கிய அரசு ஊழியர்கள்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு பட்டா- மின்சார இணைப்பு வழங்க உத்தரவு

Published On 2023-03-26 07:54 GMT   |   Update On 2023-03-26 07:54 GMT
  • கணவரால் கைவிடப்பட்ட நிலையில் சத்யபாமா இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
  • கிராம சபை கூட்டத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி சத்யபாமா, கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

உடன்குடி:

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யபாமா. இவர் தனது கணவரால் கைவிடப்பட்ட நிலையில் இரு குழந்தை களுடன் தனியாக வசித்து வருகிறார்.

சத்யபாமா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகன் 5-ம் வகுப்பும், மகள் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நயினார்பத்து கிராம ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தலைமையில் கடந்த

22-ந்தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சத்யபாமா, தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

அதில் குழந்தைகள் படிப்பதற்கு மின்சாரம் இல்லை என்று கோரிக்கை வைத்தார்.

மாவட்ட கலெக்டர் வைப்புத்தொகை செலுத்தி சத்யபாமாவின் வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

மேலும், அவர் குடி யிருக்கும் இடத்திற்கு பட்டா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் இலவச வீடு கட்டுவதற்கான நடவடிக்கை யினையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து சத்யபாமா வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் பட்டா உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சத்யபாமா கூறியதாவது:-

பல ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கவில்லை. எனவே கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தேன். ஒரு சில நாளில் எனது வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் பட்டா ஆகியவை வழங்கப்பட்டது.

மனு அளித்த ஒரு சிலநாளில் நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மின்சார வெளிச்சத்தில் எனது பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள் என்று கூறினார்.

Tags:    

Similar News