மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெற ஆணைகள்- கலெக்டர் வழங்கினார்
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்கள் பெறப்பட்டது.
- நெகிழி மாசில்லா சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதா ரருக்குதெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அவர், வருவாய் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை 2 நபர்களுக்கும், கடந்த ஆண்டு தேர் தீ விபத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகள் மற்றும் புதிய கான்கிரீட் வீடு கட்டுவதற்கான ஆணைகளை 3 நபர்களுக்கு வழங்கினார்.
பின்னர் நெகிழி மாசில்லா சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் விழிப்புணர்வு சுவரொட்டியினை வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.