இளையோர் கலந்துரையாடல் நடத்த ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
- இந்தியா நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பும் இணைந்து இளையோர் கலந்துரையாடல் - 2047 எனும் நிகழ்ச்சியை சமூக அடிப்படை மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடத்த உள்ளது.
- இந்த நிகழ்வை பொறுப்பேற்று நடத்த விரும்பும் சமூக அடிப்படை நிறுவனங்கள் நேரு யுவ கேந்திராவை அனுகி இதற்கான விண்ணப்பங்க ளைப் பெற்று விண்ணப்பிக்க லாம்.
சேலம்:
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், அதன் தன்னாட்சி நிறுவனமாகிய இந்தியா நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பும் இணைந்து இளையோர் கலந்துரையாடல் - 2047 எனும் நிகழ்ச்சியை சமூக அடிப்படை மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடத்த உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மிகச் சிறந்த சமூக மேம்பாட்டு வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் தலைமை யிலான இளையோர் கலந்துரையாடல், 5 உறுதிமொழிகள் குறித்த நேர்மறை விவாதம் நடை பெறும். இதில் குறைந்த பட்சம் 500 இளையோர் (இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்) பங்கேற்பர்.
இதன் நிறைவில் எதிர்கால இந்தியாவிற்கான திட்டங்கள் உருவாக ஆணை செய்வார்கள். இந்நிகழ்ச்சியை சிறப்பாக திட்டமிட்டு அமைப்ப தற்கான செலவு தொகை யாக ரூ.20 ஆயிரம் பொறுப்பேற்று நடத்தும் சமூக அடிப்படை நிறுவ னத்திற்கு நிகழ்ச்சி முடிந்தபின் தரப்படும்.
இந்த நிகழ்வை பொறுப்பேற்று நடத்த விரும்பும் சமூக அடிப்படை நிறுவனங்கள் நேரு யுவ கேந்திராவை அனுகி இதற்கான விண்ணப்பங்க ளைப் பெற்று விண்ணப்பிக்க லாம். விண்ணப்பிப்போர் எவ்வித அரசியல், கட்சி சார்பற்றவர்களாகவும், எந்த வித களங்கமும், இல்லாத முன்வரலாறு கொண்டவர்களாகவும் இருப்பதோடு நிறுவனங்கள் மீது எவ்வித குற்ற வழக்கும் இருக்கக் கூடாது.
மேலும் இளையோர் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தி முடிக்க போதிய நிறுவன அமைப்பு பலம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் டர்வின் சார்லஸ்டன் தெரிவித்து உள்ளார்.