குனியமுத்தூரில் புறக்காவல் நிலையம்
- கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி, புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
- புட்டுவிக்கி புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்.
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூரில் இருந்து உக்கடம் செல்லும் புட்டு விக்கி சாலையில் உள்ள புறக்காவல் நிலையம், புதிய கட்டிடங்கள் உடன் புனரமைக்கப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. அப்போது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி, புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம், மதிவாணன், சுகாசினி, உதவி கமிஷனர் ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், புட்டுவிக்கி புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்.
அங்கு உள்ள போக்குவரத்து சாலையில் ஆங்காங்கே சிசிடிவி கண்காணிப்பு கேமராகள் பொருத்தப்படும. இதன்மூலம் அந்த பகுதியில் குற்றங்கள் குறைவதற்கு, இந்த புற காவல் நிலையம் ஏதுவாக அமையும் என்று தெரிவித்து உள்ளார்.