உள்ளூர் செய்திகள்

அலுவலக கட்டிட கட்டுமான பணியை கலெக்டர் லலிதா பார்வையிட்டார்.

நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணி- கலெக்டர் ஆய்வு

Published On 2022-10-08 09:39 GMT   |   Update On 2022-10-08 09:39 GMT
  • மூன்று மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்து நெல் சேமிப்பதற்கு ஏதுவாக அமையும்.
  • ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கருகாவூர், வடகால், எடமணல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது திருகருக்காவூரில் இயங்கி வரும் அங்கன்வாடிக்கு சென்று அங்கன்வாடி குழந்தைகளிடம் ஒன்று, இரண்டு சொல்ல சொல்லி கேட்டு குழந்தைகளை தட்டிக் கொடுத்தார்.

மேலும் இதைத்தொடர்ந்து எடமணலில் புதிதாக கட்டப்பட்டு வரும் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவுக் கொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நெல் சேமிப்பு புதிய கிடங்கின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது கலெக்டர் லலிதா கூறும்போது, எடமணலில் உள்ள 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கின் கட்டுமான பணிகளை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மூன்று மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்து நெல் சேமிப்பதற்கு ஏதுவாக அமையும் என்றார்.

பின்னர் எடமணல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று மரக்கன்றுகளை நட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு நோயாளியிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின் போது கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரண சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா செல்வராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் சுகன்யா பிரேம், தன்னார்வலர் யாமினி அழகு மலர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News