உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பழனி ரெயில் நிலையத்தில் வாகன காப்பகம் இல்லாததால் பயணிகள் அவதி

Published On 2023-07-28 04:49 GMT   |   Update On 2023-07-28 04:49 GMT
  • பழனி ரெயில்நிலையத்தில் கடந்த சில நாட்களாக வாகன நிறுத்தம் செயல்பாடு இல்லாமல் உள்ளது.
  • வாகன நிறுத்தம் பூட்டி கிடப்பதால் மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்திச் செல்கின்றனர்.

பழனி:

பழனி வழியாக கோவை, பாலக்காடு, திருச்செந்தூர், திருவனந்தபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்று வட்டார பகுதி மக்கள் என தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.

குறிப்பாக பழனி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன பணியாளர்கள் திண்டுக்கல், உடுமலை செல்லும்போது தங்கள் வாகனங்களை பழனி ரெயில்நிலைய வாகன நிறுத்தத்தில் விட்டுவிட்டு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பழனி ரெயில்நிலையத்தில் கடந்த சில நாட்களாக வாகன நிறுத்தம் செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அங்கு மோட்டார் சைக்கிள்களை நிறுத்த முடியாமல் ரெயில்நிலையத்தின் வெளிப்பகுதியில் பயணிகள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

வாகன நிறுத்தம் பூட்டி கிடப்பதால் மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்திச்செல்கின்றனர். இதனால் வாகன திருட்டு அபாயமும் உள்ளது. எனவே ரெயில்நிலையத்தில் வாகன நிறுத்த வசதியை மீண்டும் கொண்டுவர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, வாகன நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் இன்னமும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. எங்களின் மோட்டார் சைக்கிள்களை ரெயில்நிலையத்தின் வெளிப்பகுதியில் நிறுத்தி வருகிறோம். எனவே மீண்டும் வாகன நிறுத்தம் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News