உள்ளூர் செய்திகள்

பனை மர விதைகள் நடவு பணி நடைபெற்றபோது எடுத்தபடம்.

ஆத்தூரில் பனை மர விதைகள் நடவு

Published On 2022-11-20 07:53 GMT   |   Update On 2022-11-20 07:53 GMT
  • தாமிரபரணி ஆற்றோரங்களில் பனை மர விதைகள் நடும் பணி நடைபெற்றது.
  • டாக்டர் கென்னடி பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தாமிரபரணி ஆற்றோரங்களில் பனை மர விதைகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி தலைமை தாங்கினார். சேர்ந்தபூமங்கலம் ஊராட்சி மன்ற செயலர் ரூபஸ்டா முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் கென்னடி கலந்து கொண்டு பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

மதர் சமூக சேவை நிறுவன சட்ட ஆலோசகர் வக்கீல் ரமேஷ், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென்மண்டல ஒருங்கிணைப்பாளரும் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல் மற்றும் சேர்ந்தபூமங்களம் ஊராட்சி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்தனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணித்தள பொறுப்பாளர் லட்சுமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் செய்தனர்.

Tags:    

Similar News