சாலை விஸ்தரிப்பு பணிக்காக பணகுடியில் மாற்று இடத்தில் பிடுங்கி நடப்பட்ட பனை மரங்கள்
- சாலை விஸ்தரிப்பு பணியின்போது ஏராளமான பனை மரங்கள் இடையூறாக இருந்தது.
- பனை மரத்தை மாற்று இடத்தில் நட்ட செயல் அந்த வழியாக சென்றவர்களை வியக்க செய்தது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியா புரத்தில் இருந்து கேசவனேரி வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை ஓரங்களில் விஸ்தரிப்பு பணியின்போது இடையூறாக ஏராளமான பனை மரங்கள் இருந்தது.
இதனை பிடுங்கி அப்புறப்ப டுத்தாமல் ஒப்பந்தக்காரர்கள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பனைமரத்தை வேருடன் எடுத்து மாற்று இடத்தில் நட்டனர். ஆங்காங்கே பனை மரங்கள் அழிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் ரோடு போடுவதற்கு இடையூறுகளாக உள்ள பனை மரத்தை அழிக்காமல் மாற்று இடத்தில் பிடுங்கி நட்ட செயல் அந்த வழியாக சென்றவர்களை வியக்க செய்தது.
இந்த நிகழ்வில் கிரீன் கேர் மாவட்ட பசுமை குழு உறுப்பினர் சையது, வள்ளியூர் உதவி பொறியாளர் முத்து முருகன், ராதாபுரம் உதவி கோட்ட பொறியாளர் சேகர் மற்றும் ஏர்வாடி அறம் செய் பசுமை இயக்கம் சேக் முகமது, வள்ளியூர் பசுமை கரங்கள் சித்திரவேல், பணகுடி மூக்க மாணிக்கம், ரோஸ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.