உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சித்தரேவு ஊராட்சி கவுன்சிலர் ராஜினாமா செய்வதாக மனு

Published On 2022-08-21 04:44 GMT   |   Update On 2022-08-21 04:44 GMT
  • தனது கோரிக்கையை சித்தரேவு ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என கூறி தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மனு அளித்தார்
  • மனுவை பரிசீலனை செய்வதாக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார்

செம்பட்டி:

திண்டுக்கல் அருகே ஆத்தூர் சித்தரேவு 1-வது வார்டு பெண் உறுப்பினராக இருப்பவர் மீனாட்சி ஸ்டாலின்.

இவர் தனது வார்டு பகுதியான சித்தரேவு வடக்குப் பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை எனவும் தனது கோரிக்கையை சித்தரேவு ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என கூறி தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையானிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் கூறுகையில், சித்தரேவு ஊராட்சி, 1-வது வார்டு பெண் உறுப்பினர் மீனாட்சி ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News