உள்ளூர் செய்திகள்

ஊராட்சி செயலாளரை கண்டித்து பஞ்சாயத்து தலைவர் கலையரசி தர்ணாவில் ஈடுபட்டார்,

திட்டக்குடி அருகே ஊராட்சி செயலாளரை கண்டித்து பஞ்சாயத்து தலைவர் தர்ணா

Published On 2023-02-08 10:01 GMT   |   Update On 2023-02-08 10:01 GMT
ஆவினங்குடி ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணமாக காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்துள்ளார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவினங்குடி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கலையரசி (வயது 34). இவர் ஆவினங்குடி ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணமாக ஊராட்சிகள் சட்ட விதியின்படி பஞ்சாயத்து தலைவர் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்துள்ளார்.  தொடர்ந்து ஆவினங்குடி பஞ்சாயத்து நிர்வாகம் பி.டி.ஓ. கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி செயலாளர் இளவரசி நேற்று மாலை துப்புரவு பணி யாளர்களுக்கு சம்பளம் போடுவதற்காக கேஸ் புக் மற்றும் தீர்மானம் நோட் தருமாறு பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டார் 

அதற்கு பஞ்சாயத்து தலைவர் கலையரசி அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்குமாறு கூறியுள்ளார். இதில் ஊராட்சி செயலாளர் இளவரசி வீட்டில் எழுதி எடுத்துக்கொண்டு பி.டி.ஓ.விடம் கையெழுத்து வாங்கி கொள்கிறேன் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது  இதில் ஆத்திரமடைந்த பஞ்சாயத்து தலைவர் கலையரசி உடனடியாக ஊராட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு அலுவலக வெளிப்புறத்தில் அமர்ந்து ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்ய கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.   இது குறித்து தகவல் அறிந்த மங்களூர் பி.டி.ஓ. முருகன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பஞ்சாயத்து தலைவரிடம் கூறியதை அடுத்து பஞ்சாயத்து தலைவர் போராட்டத்தை கைவிட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News