அம்மாபேட்டையில் ஊராட்சி ஒன்றிய குழுகூட்டம்
- அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
- சாலைகளில் குழாய் பதிக்கும் போது பள்ளங்களை மூட வேண்டும்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமானுல்லா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா கோபிநாத், உறுப்பினர்கள் சுமத்ரா மோகன், வெங்கட், செல்வ பாரதி கண்ணன், சுப்ரமணியன், வனிதா, மற்றும் செல்வம், உள்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர் வெங்கட் பேசும்போது கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஊராட்சி பகுதியில் சாலைகளை சேதப்படுத்தி குழாய்கள் பதிக்கப்படுவ தாகவும் சரிவரபள்ளங்களை மூடுவதில்லை எனவும், இதனால் கிராம சாலைகள் அதிகளவில் சேதமடைந்தது வருவதாகவும் கிராம மக்கள் பெரிய அளவில் பதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என பதில் அளித்தார்.
இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன் நன்றி கூறினார்.