பண்ருட்டி பலாப்பழமும் சேலம் உழவர் சந்தைகளில் விற்பனை
- கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உழவர் சந்தை களில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது.
- பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது.
சேலம்:
தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி உற்பத்தி அதிக மானதால் அதை விவ சாயிகள் கீழே கொட்டும் அளவிற்கு நிலைமை இருந்தது, இதனையடுத்து தர்மபுரி விவசாயிகள் தர்மபுரி வேளாண்மை விற்பனை மற்றும் வணி கத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) பாலசுப்பிர மணியத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்று தர்மபுரியில் கூடுத லாக உற்பத்தியாகும் தக்கா ளியை தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தக திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்து உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு மூலமாக சேலத்தில் உள்ள சூரமங்க லம், அஸ்தம்பட்டி தாத காப்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர் ஆகிய உழவர் சந்தைகளில் வெள்ளோட்ட மாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உழவர் சந்தை களில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது. உழவர் சந்தைகளில் தர்மபுரி தக்காளி இதுவரை 150 டன் தக்காளி விற்பனை ஆகி உள்ளது. இதனை விவசா யிகளும் பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்,
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது. விவசாயிகள் பயனபெறும் வகையில் கடலூரில் உற்பத்தியாகும் பலாப்ப ழங்கள் சேலம் உழவர் சந்தை களில் தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத்தின் மூலம் விற்பனை செய்ய வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிர மணியம் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனையடுத்து நேற்று சூரமங்கலம் உழவர் சந்தையில் பலாப்பழம் விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரம ணியம் கலந்து கொண்டு பலாப்பழ விற்பனை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சூரமங்கலம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் பசுபதி, ஸ்ரீதேவி ,சரோஜினி உள்பட விவசாயிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், இன்னும் ஒரு சில வாரங்க ளில் மலைப்பிரதேசத்தில் விலை கூடிய பீட்ரூட், கேரட் பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளை தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய நடவ டிக்கை எடுத்து வருகிறோம். இதே போல் சேலத்தில் உற்பத்தியாகும் மாம்பழம் பழங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.