உள்ளூர் செய்திகள்

பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா - இன்று இரவு அம்மன் சிங்க வாகனத்தில் பவனி

Published On 2023-10-30 08:55 GMT   |   Update On 2023-10-30 08:55 GMT
  • விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
  • நாளை 108 பால்குடம் பவனி, இரவில் சுமங்கலி பூஜை, சதந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.

உடன்குடி:

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி கொடை விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, வருஷாபிஷேகம், 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனியும் நடக்கிறது. நாளை காலை 108 பால்குடம் பவனி, அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, இரவில் சுமங்கலி பூஜை, அலங்கார தீபாராதனை, சதந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி, நாளை மறுநாள் பகலில் சிறப்பு பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவில் கரகாட்டம், மாவிளக்கு பூஜை, முத்தாரம்மன் சப்பர பவனியும், தினமும் வில்லின சுவாமிகள் தெருவீதி உலாவும் நடைபெறும்.ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News