பரமத்தி வேலூரில் தாபாக்கள், ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
- உணவகங்கள், டிபன் கடைகள் தாபாக்களில் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- தாபாக்கள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், டிபன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள், டிபன் கடைகள் தாபாக்களில் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பரமத்தி வேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்கரவேலு தலை மையிலான குழுவி னர், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தாபாக்கள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், டிபன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உணவகத்தில் வைத்திருந்த இறைச்சி, சமையல் எண்ணைய் மற்றும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த உணவு மாதிரி களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். உணவுப் பொருட்கள் தயாரிக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்துவது கண்டறி யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன், இது தொடர்பாக உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது:-
இங்கு செயல்படும் தாபாக்கள், டிபன் கடை கள் அனைத்திலும் மது அருந்த அனுமதியும், மது விற்பனையும் நடைபெறு கிறது. வெளி மாநில மதுபானங்கள் அதிக அளவில் விற்கப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் விரும்பி தாபாக்களுக்கு செல்கின்றனர்.
தீபாவளி அன்று தாபாக்களில் விற்பனை செய்த உணவு பொருட்கள் தரமற்றதாக இருந்ததால் சிலர் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதேபோன்று தியேட்டர்களில் வழங்கப்ப டும் திண்பண்டங்களும் சுகாதாரமற்று இருக்கிறது. எனவே தியேட்டர்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.