பரமத்திவேலூர் சகன்வலி தர்கா பள்ளிவாசலில் 178-வது சந்தனக்கூடு விழா
- சகன்வலி தர்கா பள்ளிவாசலில் இறைநேசர் ஹஜ்ரத் சகன்ஷா அவுலியாவின் உரூஸ் என்கிற 178-வது சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
- விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தாவத் விருந்து மற்றும் தப்ரூக் பிரசாதமும் வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சகன்வலி தர்கா பள்ளிவாசலில் இறைநேசர் ஹஜ்ரத் சகன்ஷா அவுலியாவின் உரூஸ் என்கிற 178-வது சந்தனக்கூடு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தாவத் விருந்து மற்றும் தப்ரூக் பிரசாதமும் வழங்கப்பட்டது. இரவு 10 மணியளவில் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் பரமத்திவேலூர் தர்கா பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் தர்கா பள்ளிவாசலை வந்தடைந்தது. காலை நடைபெற்ற மீலாது விழா வில், இஸ்லாமிய பெண்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.முன்னதாக பள்ளிவாசலில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அனைத்து மதத்தினரும், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.