உள்ளூர் செய்திகள்

பால், மஞ்சள், தயிர் உள்பட 48 வகையான பொருட்களால் பெருவுடையாருக்கு பேரபிஷேகம் செய்யப்பட்டது.

48 வகையான பொருட்களால் பெருவுடையாருக்கு பேரபிஷேகம்

Published On 2023-10-25 10:17 GMT   |   Update On 2023-10-25 10:17 GMT
  • பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களை கொண்டு பேராபிஷேகம் செய்யப்பட்டது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவில் கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் 1038- வயது சதய விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதய விழாவை முன்னிட்டு இன்று பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களைக் கொண்டு பேராபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பேரபிஷேகம் செய்யப் பட்ட 48 அபிஷேக பொருட்களின் விவரம் வருமாறு:-

வில்வம் இலை, வன்னி இலை, நொச்சி இலை, பிச்சி இலை, அத்தி கொழுந்து, அரசன் கொழுந்து, ஆலம் கொழுந்து, மாங்கொழுந்து, பலாக்கொழுந்து , விளாக்கொழுந்து, ஜெர்மன் பச்சிலை, விபூதி அபிஷேகம், தைலகாப்பு அபிஷேகம், சாம்பிராணி தைலம் அபிஷேகம், நவகவ்ய அபிஷேகம், திரவிய பொடி அபிஷேகம், வாசனைப் பொடி அபிஷேகம், நெல்லி முன்னி பொடி அபிஷேகம், மஞ்சள் பொடி அபிஷேகம், அரிசி மாவு பொடி அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், தேன் அபிஷேகம், நெய் அபிஷேகம், பசும் பால் அபிஷேகம், பசுந்தயிர் அபிஷேகம், மாதுளை முத்து அபிஷேகம், பிலாச்சுளை அபிஷேகம், ஆரஞ்சு சுளை அபிஷேகம், அன்னாசி அபிஷேகம், திராட்சை அபிஷேகம், விளாம் பழம் அபிஷேகம், கொளிஞ்சி பழம் அபிஷேகம், நார்த்தம் பழச்சாறு அபிஷேகம், சாத்துக்குடிசாறு அபிஷேகம், எலுமிச்சை பழச்சாறு அபிஷேகம், கருப்பஞ்சாறு அபிஷேகம், இளநீர் அபிஷேகம், அன்னாபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், ஏகதாரை அபிஷேகம், சகஸ்ரதாரை அபிஷேகம், சிங்கேதனம் அபிஷேகம், வலம்புரி சங்கு அபிஷேகம், சொர்ணாபிஷேகம், கங்கா ஜலம் அபிஷேகம், 108 ஸ்தாபன கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி ஆகிய 48 பொருட்களால் பெருவுடையாருக்கு பேரபி ஷேகம் செய்யப்பட்டன.

Tags:    

Similar News