உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் பவுத்ரோத்ஸவம்

Published On 2023-08-31 09:11 GMT   |   Update On 2023-08-31 09:11 GMT
  • ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் ஆண்டுதோறும் பவுத்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம் உண்டு.
  • இறுதி நாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

தென்திருப்பேரை:

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் ஆண்டுதோறும் பவுத்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம் உண்டு. கோவில்களில் தினசரி நடைபெறும் பூஜை முறைகளில் ஏதாவது விடுதல்கள் இருப்பின் அதற்கு பரிகாரங்களாக பவுத்ரோத்ஸவம் நடத்துவதும் வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பவுத்ரோத்ஸவம் கடந்த 3 நாட்கள் நடந்தது.

இறுதி நாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு சிறப்பு ஹோமம், 11 மணிக்கு பூர்ணாகுதி, நாலாயிர திவ்யப்பிரபந்தம் நடந்தது. மதியம் 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு ஹோமம், 7.30 மணிக்கு தங்க தோளுக்கினியானில் சுவாமி கள்ளப்பிரான் தாயார்களுடன் புறப்பாடு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன், வாசு, ராமானுஜன், சீனு, ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், திருவேங் கடத்தான், அத்யாபகர்கள் சீனிவாசன், பார்த்தசாரதி, சீனிவாசதாத்தம், நம்பி, கண்ணன், வைகுண்ட ராமன் சத்யநாராயண், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜித் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News