உள்ளூர் செய்திகள்
தீபாவளி பண்டிகையையொட்டி களைகட்டிய பாவூர்சத்திரம் ஆட்டுச்சந்தை
- தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் கால்நடை சந்தைகளில் விற்பனை அதிகரித்துள்ளது
- ஆடுகள் விலை ரூ.4 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.
தென்காசி:
தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் கால்நடை சந்தைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு இன்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் குவிந்தனர். அங்கு ஆடுகள் விலை ரூ.4 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.இன்று ஒரே நாளில் லட்ச க்கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.