கோத்தகிரியில் கோத்தர் பழங்குடி மக்கள் அமைதி பேரணி
- புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தப்பட்டது.
- ஊர்வலமாக சென்று தங்களது குலதெய்வ கோவிலில் சென்று அமைதி பேரணியை முடித்தனர்.
அரவேணு
கோத்தகிரியில் பழைய உழவர் சந்தைக்கு மாற்றாக புதிய உழவர் சந்தை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி கோத்தர் பழங்குடியின மக்கள் அமைதி பேரணி நடத்தினர்.
இந்த பேரணியானது கோத்தகிரியில் இருந்து புறப்பட்டு, பாண்டியன்பார்க், கிருஷ்ணாபுதூர், கம்பாய் கடை, மார்க்கெட், ராம்சண்ட் என முக்கிய சாலைகள் வழியாக தாசில்தார் அலுவலகம் சென்று மனுவை வழங்கினார்.
பின்னர் ஊர்வலமாக சென்று தங்களது குலதெய்வ கோவிலில் சென்று அமைதி பேரணியை முடித்தனர். அமைதி பேரணியில் பங்கேற்ற மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து, கருப்பு கொடியுடன் தங்களது பாரம்பரிய இசையை முழங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.
இதுகுறித்து பேரணியை தலைமை ஏற்று நடத்திய கம்டே சுப்பிரமணிய கூறுகையில், நாங்கள் உழவர் சந்தைக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் பழங்குடியின மக்களின் கோவில் அமைந்துள்ளதால் கோவிலின் புனிதத் தன்மை கெட்டுப் போய்விடும் என்பதால் தேர்வு செய்யப்பட்ட இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்தே எங்களது கோரிக்கை என்றார்.