- கிராமப்புற வயல்வெளிகளில் வெட்டுகிளிகள் போல் மயில்கள் கூட்டம், கூட்டமாய் காணப்படுகின்றன.
- வீடுகளின் மேற்கூரைகளிலும், தென்னை மரங்களிலும் வசிக்க தன் வாழ்வை மாற்றி அமைத்துக்கொண்டது.
திருவோணம்:
ஒருகாலத்தில் மயில்களை மலைப்பகுதிகளில் அல்லது வனவிலங்குகள், பறவைகள் சரணாலயத்தில்தான் காணமுடியும். எங்காவது கோயில்களில் அரிதாகக் காணலாம். ஆனால், தற்போது கிராமப்புற வயல்வெளிகளில் வெட்டுகிளிகள்போல் மயில்கள் கூட்டம், கூட்டமாய் காணப்படுகின்றன.
தஞ்சை மாவட்டம் திருவோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மயில்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது.
வயல்களில் தாவரங்களை உண்பதாலும் சோளம் கடலை போன்ற தாவரங்களை தன் கால்களால் தாவரத்தை சாய்த்து உண்பதாலும் மற்றும் அறுவடை செய்த தாவரங்களை கூட்டம் கூட்டமாக வந்து உண்பதாலும் வேளாண் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதனை துரத்தி விட்டாலும் மீண்டும் மீண்டும் வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குன்று காடுகளில் பழக்கப்பட்ட மயில்கள் தன்னை மாற்றிக் கொண்டு வயல்வெளிகளில் வாழ பழகி விட்டது.
வீடுகளின் மேல் கூரைகளிலும் கட்டிடங்களிலும் தென்ன மரங்களிலும் வசிக்க தன் வாழ்வை மாற்றி தகவமைத்துக்கொண்டது.
ஊர்களின் ஓரங்களில் உள்ள குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் அவற்றை சுற்றி அதிக மரங்களை வளர்ப்பதால் மற்றும் சிறு சிறு காடுகள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி சமவெளி பகுதிகளில் காடுகளை வளர்ப்பதாலும் மயில்கள் ஊர்களில் உள்ளே வருவதை நம்மால் தவிர்க்க இயலும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.