உள்ளூர் செய்திகள்

அதிக அளவு பயணிகளை ஏற்றி வந்த பஸ் நடத்துனரை போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினர்.

ஒட்டன்சத்திரத்தில் அதிக பயணிகளை ஏற்றி வந்த பஸ்களுக்கு அபராதம்

Published On 2022-11-18 05:36 GMT   |   Update On 2022-11-18 05:36 GMT
  • குறைந்த அளவு பஸ்கள் வருவதால் மா ணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்கின்றனர்.
  • அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த பஸ்களை நிறுத்தி அறிவுரை வழங்கி னர். ஒருசில கண்டக்டர்க ளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரத்திற்கு அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அதிக அளவு டவுன் பஸ்கள் இயகப்படுகின்றன. இதில் பள்ளி மாணவ-மாணவி கள், கூலித்தொழிலாளிகள் என ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். ஒருசில வழித்தடங்களில் குறைந்த அளவு பஸ்கள் வருவதால் மா ணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருகின்றன.

எனவே அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வரக்கூடாது என்று அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கும், ஆட்டோக்களுக்கும் அறி வுரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் சாலைப்புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அபராதம்

அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த பஸ்களை நிறுத்தி அறிவுரை வழங்கி னர். ஒருசில கண்டக்டர்க ளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.இதே போன்ற தவறை மீண்டும் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர். போலீசாரின் இதுபோன்ற ஆய்வு தொடர்ந்து நடைபெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News