உள்ளூர் செய்திகள்

கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புகையிலை பொருட்களை விற்ற கடைகளுக்கு அபராதம்

Published On 2023-03-03 09:38 GMT   |   Update On 2023-03-03 09:38 GMT
  • விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.
  • சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்:

திட்டச்சேரியில் பள்ளிகளுக்கு அருகே 100 மீட்டர் தூரத்துக்குள் கடைகளில் சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர் பிரதாப், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் திட்டச்சேரி மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் அரசின் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.

மேலும் கிலோ கணக்கில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

ஆய்வின்போது நலக்கல்வியாளர் மணவாளன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், சுகாதார ஆய்வாளர்கள் மணிமாறன், ஆனந்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News