உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே தரமற்ற நடைபாதை அமைத்ததாக மக்கள் குற்றச்சாட்டு

Published On 2023-03-24 09:18 GMT   |   Update On 2023-03-24 09:18 GMT
  • ரூ. 6 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைக்கப்பட்டது.
  • காலில் மிதிக்கும் போது, சிமெண்ட் அப்படியே வருகிறது.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு அருகே உள்ளது பில்லிக்கம்பை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சக்தி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அண்மையில் ரூ. 6 லட்சம் மதிப்பில் நடை பாதை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த நடைபாதை மிகவும் மோசமாக உள்ளது. காலில் மிதிக்கும் போது, சிமெண்ட் அப்படியே வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பணி செய்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தரமற்ற நடைபாதை அமைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News