உள்ளூர் செய்திகள்

கூடலூரில் பொதுமக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-08-27 10:53 GMT   |   Update On 2022-08-27 10:53 GMT
  • நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பகத்தின் கரையோரம் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்தது.
  • உண்ணாவிரத போராட்டத்தையொட்டி அங்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

ஊட்டி

நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பகத்தின் கரையோரம் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக மாநில அரசுகள் 3 மாதத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கும் படி தெரிவித்தது.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வியாபாரிகள் தங்களது கடைகளில் கருப்புக் கொடிகளை கட்டி போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று கூடலூர் காந்தி மைதானத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இதில் திரளானவனர்கள் பங்கேற்றனர்.இதேபோல் இப்பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு தங்களது உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரத போராட்டத்தையொட்டி அங்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள் கூறுகையில்,சூழல் உணர் திறன் மண்டலத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News