உள்ளூர் செய்திகள்

தஞ்சை தற்காலிக மார்க்கெட்டில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்.

தஞ்சை மார்க்கெட்டில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்

Published On 2023-11-14 10:13 GMT   |   Update On 2023-11-14 10:13 GMT
  • சங்கரா மீன் கிலோ ரூ.200 முதல் 300-க்கு விற்பன செய்யப்பட்டது.
  • மீன்களின் வரத்து அதிகம் இருந்ததால் விலை குறைந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை கொண்டிராஜபா ளையம் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இங்கு தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் மீன்கள் வாங்க அதிகளவில் கூட்டம் இருக்கும்.

இந்த நிலையில் இன்று உள்ளூரில் பிடிக்கப்பட்ட உயிர் மீன்கள் மற்றும் நாகை, ராமேஸ்வரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

மீன்களின் வரத்து அதிகம் இருந்ததால் அவற்றின் விலையும் கணிசமாக குறைந்தது.

சங்கரா மீன் கிலோ ரூ.200 முதல் 300-க்கு விற்பன செய்யப்பட்டது.

இதேப்போல் இறால் கிலோ ரூ.250, நண்டு ரூ.250 முதல் 300-க்கும், கெண்டை மீன் ரூ.150, கிழங்கா ரூ.150-க்கு விற்பனையானது. மீன்களில் விலை குறைவாக இருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது .

காலையில் மழை பெய்தாலும் பொருட்படுத்தாமல் மக்கள் ஏராளமானோர் வந்து தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.

இதனால் மீன் மார்க்கெட் பரபரப்பாக இயங்கியது.

Tags:    

Similar News