சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி
- மழைநீர் தேங்கி நிற்பதால், சாலையில் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
- அப்பகுதியை கடப்பதற்கு பள்ளி மாணவ- மாணவிகளும், வயதானவர்களும் சிரமப்படும் நிலை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால், மழை நீர் சாலைகளில் ஆறு போல ஓடியது.
கனமழையின் காரணமாக, சாலைகளில், உள்ள பள்ளங்களில், மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.
நல்லமாங்குடி, அக்ரஹாரத்தில் தெருவிற்கு செல்லும் சாலை முன்பாக, மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
சாலை வழியாக, அரசு பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும், அரசு மாணவர் விடுதிக்கும், செல்ல வேண்டும்.
மழைநீர் தேங்கி நிற்பதால், சாலையில் பள்ளம் தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
பள்ளி குழந்தைகள், தேங்கி நிற்கும் மழை நீரில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது.
ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் பொழுது, சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்பதும், அதனால் அந்தப் பகுதியை கடப்பதற்கு பள்ளி மாணவ மாணவிகளும் வயதானவர்களும் சிரமப்படும் நிலை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.
இந்தச் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் உடனடியாக வடியும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.