நத்தம், செந்துறை, சிறுகுடியில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி
- கடந்த 3 நாட்களாக காலை, மாலை, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் திடீர் திடீரென அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
- மின்தடையால் இரவு நேரங்களில் கொசு தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
நத்தம்:
நத்தம், செந்துறை, சிறுகுடி ஆகிய துணை மின் நிலையத்திலிருந்து சிறுகுடி, ஊராளிபட்டி, நத்தம், கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக காலை, மாலை, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் திடீர் திடீரென அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து மக்கள் கூறுகையில் குறைந்த அளவு மின்சாரத்தால் வீட்டில் உள்ள மிக்ஸி, குக்கர், பிரிட்ஜ், டிவி உள்பட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
மேலும் மின்சாரத்தை மட்டும் நம்பி தொழில் நடத்தும் வணிக நிறுவன ங்கள், பின்னலாடை தொழில் செய்யும் நிறுவன ங்கள், மாவு அரைக்கும் இயந்திரம் வைத்திருப்ப வர்கள் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் இயந்திரங்களும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் தொழிலாளர்க ளும் குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடிக்க முடியாத நிலை உள்ளது.
மின்தடையால் இரவு நேரங்களில் கொசு தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்படு கின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்விசிறி இல்லாத காரணத்தினால் குழந்தைகளும் வியர்வையில் நனைந்து தூங்க முடியாத அவல நிலை உள்ளது. அலுவலக நேரங்களில் மின்தடையால் பணியா ளர்கள் சிரமப்படுகின்றனர். மின்தடைக்கான காரணம் தெரியாமல் புலம்புகின்ற னர். எனவே இனிவரும் நாட்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.