உள்ளூர் செய்திகள்

நகைக்கடைகளில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

Published On 2023-07-17 09:42 GMT   |   Update On 2023-07-17 09:42 GMT
  • பொதுமக்கள் நகைக்கடைகளில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்துள்ளது தெரியவந்தது.
  • உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி புகார் அளிக்கலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் நகைக்கடையில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு முதலீட்டு திட்டங்களில் பணமாகவும், நகைகளாகவும் பெற்று அவற்றை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஜெமிலா வெற்றிக்கொடி புகார் செய்தார்.

இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், பின்னர் தஞ்சை பொருளா தார குற்றப்பி ரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நட த்தப்பட்ட விசாரணையில், அந்த நகைக்கடை செயல்பட்டு வந்த தஞ்சையிலும், அதன் கிளைகளான ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாற்றமடைந்துள்ளது தெரிய வந்தது.

எனவே, இந்த வழக்கில் அந்த நகைக்கடைகளில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்து, முதலீட்டு தொகைகள் மற்றும் தங்க நகைகள் திருப்பி தரப்படாமல் ஏமாற்ற ப்பட்டிருந்தால், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பா நகர் முதல் தெருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News