உள்ளூர் செய்திகள்

கலெக்டர் சாருஸ்ரீ.

நடமாடும் மதி அங்காடி அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-05-28 09:37 GMT   |   Update On 2023-05-28 09:37 GMT
  • வாகன அங்காடி அமைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பங்களை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், சிற்றுண்டிகள், உணவு வகைகள், பழச்சாறு வகைகள் விற்பனை செய்திட ஏதுவாக நடமாடும் மதி அங்காடி (எக்ஸ்பிரஸ்) என்ற பெயரில் வாகன அங்காடி அமைத்து மாற்றுத்தி றனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, நடமாடும் மதி அங்காடியை (எக்ஸ்பிரஸ்) இயக்குவதற்கும், பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை யில் ஆர்வமும், முன்அனு பவமும், சுயஉதவிக்குழுவில் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஒற்றைப்பெற்றோர் ஆகியோர்கள் தொடர்புடைய சுய உதவிக்குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களில் வராக்கடன் ஏதுமில்லை என்ற சான்றி தழுடன் விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்று வருகிற 31-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை ஒருங்கிணைந்த கட்டிடத்தில் தரைதளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் சமர்ப்பித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News