உள்ளூர் செய்திகள்

கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.

மக்கள் நேர்காணல் முகாம்

Published On 2022-08-25 09:12 GMT   |   Update On 2022-08-25 09:12 GMT
  • 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
  • தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா உபய வேதாந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935; மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கி பேசியதா வது, தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

மக்கள் நேர்காணல் முகாமில் ஊரக வளர்ச்சி த்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் ரூ.21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணையும், வருவாய்துறையின் சார்பில் 31 பேருக்கு ரூ.31 ஆயிரம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாவும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.11 ஆயிரத்து 700 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரமும், வேளாண்மைத் துறை சார்பில் 17 பேருக்கு ரூ.25 ஆயிரத்து 235 மதிப்பீட்டில் இடுபொருட்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பேருக்கு மரக்க ன்றுகளும் என மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என கூறினார்.

முன்னதாக அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திட்ட விளக்ககண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்.சித்ரா, ஆர்.டி.ஓ சங்கீதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) கண்மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், தாசில்தார் பத்மினி, உபயவேதந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News