உள்ளூர் செய்திகள்

தடகள பயிற்சிக்காக 59 மாணவ-மாணவிகள் தேர்வு

Published On 2023-04-14 02:30 GMT   |   Update On 2023-04-14 02:37 GMT
  • தடகள பயிற்சிக்காக 59 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • மாவட்ட விளையாட்டு அலுவலர் தகவல்

பெரம்பலூர்:

பெரம்பலூர் தடகள பயிற்சிக்கான தேர்வு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாட்டு மையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடகள பயிற்சிக்கான தேர்வு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் தொடங்கி வைத்தார்.

தேர்வு தடகள போட்டிகளில் மாவட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 35 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 59 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவார்கள், என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்தார்.

Tags:    

Similar News