உள்ளூர் செய்திகள்

தென்னை நார் தொழிற்சாலைகளை வகைப்படுத்த அமைச்சர் வலியுறுத்தல்

Published On 2023-08-30 08:25 GMT   |   Update On 2023-08-30 08:25 GMT
  • உற்பத்தி செயல்முறைகளின் அடிப்படையில் தென்னை நார் தொழிற்சாலைகளை வகைப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் மெய்ய நாதன் வலியுறுத்தி உள்ளார்
  • சுற்றுச்சூழல் மற்றும் வனம் பருவநிலை மற்றும் தொழிலாளர் வேலைவாய்ப்புத்துறை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவை சந்தித்து ஒரு மனு அளித்தார்

பெரம்பலூர், 

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் மெய்ய நாதன் புதுடெல்லியில் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனம் பருவநிலை மற்றும் தொழிலாளர் வேலைவாய்ப்புத்துறை மந்திரி பூபேந்தர் யாதவை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-சென்னை தலைமை செயலகத்தில் எனது தலைமையில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற கூட்ட அரங்கில் தென்னை நார் தொழில் உற்பத்தி சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தென்னை நார் தொழிற்சாலைகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அவற்றிற்கு தீர்வுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தற்போதைய நிலையில் இந்த தொழிற்சாலைகள் வெள்ளை வகைப்பாட்டில் தான் தொடர்கிறது என தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் ஜூலை 2023 ல் வெளியிடப்பட்ட மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழிற்சாலைகளுக்கான வரைவு வகைப்பாடு அறிவிக்கையின் மீது தென்னை நார் சங்கங்களும் முறையீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.தென்னை நார் தொழில்களை ஆரஞ்சு என வகைப்படுத்துவதால் தென்னை நார் தொழில்களின் தற்போதைய சிரமங்கள் மற்றும் வீழ்ச்சி குறித்து சிந்திக்கப்பட்டது.மீண்டும் தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றினால் மின்சுமை ஏற்படும். தேவைகள் மாற்றம், காங்கிரிட் தளம் அமைத்தல், விவசாயிகளுக்கு வருவாய் இடர்பாடு ஏற்படும்.மேலும் இந்த தொழிலில் கழிவுநீர் எதுவும் வெளியே ற்றப்படுவதில்லை. எனவே உற்பத்தி செயல்முறையின் அடிப்படையில் தென்னை நார் தொழில்களை மறுவகைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.தென்னை நார் உற்பத்தி (உலர் செயல்முறை அல்லது ஈர செயல்முறை) வெள்ளை வகையாகும்.இதில் ரசாயன செயல்முறை அல்லது சாயம் பூசும் செயல்முறை என்பது ஆரஞ்சு வகையாகும்.எனவே தொழில் உற்பத்தி செயல்முறைகளின் அடிப்படையில் அதனை வகைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய மந்திரி தென்னை நார் தொழிற்சாலைகளை மறுவகைப்படுத்துவது குறித்த அறிவிக்கையின் இறுதி வடிவம் வெளியிடும்போது மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.மனு அளித்த போது தமிழ்நாடு மாநில தென்னை நார் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதி போகோ மன்ஸ், கோவை மாவட்ட தென்னைநார் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பழனி பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News